search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாடாளுமன்ற தேர்தல்"

    • கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
    • பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்வது குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்

    ராணிப்பேட்டை:

    அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, சோளிங்கர், அரக்கோணம், திருத்தணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் வாக்கு எண்ணிக்கை மையம் வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைய உள்ளது.

    இந்த கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு கட்டிடத்தில் ராணிப்பேட்டை, சோளிங்கர், திருத்தணி ஆகிய தொகுதிகளின்வாக்கு எண்ணிக்கையும், புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தில் ஆற்காடு, அரக்கோணம், காட்பாடி ஆகிய தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் மேற்கண்ட கட்டிடங்களில் உள்ள அறைகளில் வாக்குகளை எண்ணும் அறைகளும், வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைக்கும் கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட உள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கல்லூரி வளாகத்தை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளும் வாகனங்கள் வந்து செல்வதற்கான நுழைவா யில்களையும், அனைத்து பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்வது குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    • நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.
    • விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டா் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் ஜெயசீலன், எம்.பி.க்கள் தனுஷ்குமார், நவாஸ் கனி, எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குறித்து ஆலோசனை செய் யப்பட்டது. இதையடுத்து விருதுநகர் கலெக்டர் அலு வலக வளாகத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் தமிழக மக்கள் நலனை கருத் தில் கொண்டு அனைத்து கட்சிகளும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். கர்நாடக அரசு ஆணையத்தின் உத்தரவுப் படி தண்ணீரை திறந்து விடும் நிலையில் அங்குள்ள பா.ஜ.க. முன்னாள் முதல் வர்கள், சிலரை தூண்டி விட்டு பிரச்சினையை பெரி தாக்குகிறார்கள். காங்கிரசை பொருத்த மட்டில் மத்திய மந்திரியிடம் தமிழக மக்களின் நலனை காக்க வேண்டும் என ஜோதி மணி எம்.பி. தலை மையில் மனு கொடுத்துள்ளோம். 2 மாநிலங்களிலும் முதல்வர் களை தரம் தாழ்ந்து விமர் சிப்பதை தவிர்க்க வேண் டும். நாடாளுமன்ற தேர்த லில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    2016-ல் இருந்து தொட ரும் அ.தி.மு.க., பா.ஜனதா உறவு முறிந்து விட்டதாக கூறினாலும் அவர்கள் பிர தமர் வேட்பாளராக மோடியை தான் தெரிவிப்பார்கள். இந்தியா கூட்ட ணியை பொருத்த மட்டில் பிரதமர் வேட்பாளர் தக்க நேரத்தில் முடிவு செய்யப்படும். தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜனதா தவிர்க்கப் பட வேண்டியவை என கூறி வரும் சீமான் தான், தவிர்க்கப்பட வேண்டியவர்.

    விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தமட் டில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை தேசிய தலை வர் முடிவு செய்வார். விரு துநகர் மாவட்ட கண்கா ணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட் டது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 10 சதவீதம் பேர் தொடர்ந்து இணைப்புகள் பெறவில்லை என தெரிவிக் கப்பட்டது.

    விருதுநகர் வடமலை குறிச்சி விலக்கில் சர்வீஸ் சாலை, கலெக்டர் அலுவல கம் முன்பு மேம்பாலம் ஆகிய பணிகள் குறித்து விவாதிக்க தேசிய நெடுஞ் சாலை அதிகாரிகள் வராததற்கு கண்டனம் தெரிவிக் கப்பட்டது. சாத்தூரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள்.
    • மதுபான கடை களை மூட வேண்டும் என்று தமிழக அரசிற்கு வரும் 2-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கியிருக்கிறோம்.

    மதுரை

    மதுரையில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதா வது:-

    தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மதுபான கடை களை மூடுவோம் என கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகியும் மது பான கூடங்களை மூடு வதற்கு அரசு முன்வர வில்லை. மதுபான கடை களை மூட வேண்டும் என்று தமிழக அரசிற்கு வரும் 2-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கியிருக்கி றோம்.

    இல்லையென்றால் மக்களின் ஆதரவுடன் பெரும் போராட்டம் வெடிக்கும். சில மாதங்க ளுக்கு முன்பு 200 கடை களை மூடிவிட்டு தற்போது எந்த வித முன்னறி விப்புமின்றி பல டாஸ்மாக் கடைகளை திறந்து வரு கின்றனர்.

    சனாதனம் விவகாரத்தில் அமைச்சர் உதயநிதிக்கு புரிதல் இல்லை. தி.மு.க. மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இதனால் வரும் நாடாளு மன்றத் தேர்தலில் தி.மு.க.வின் தோல்வியை திசை திருப்பும் வகையில் சனாதனத்தை பற்றி பேசி வருகின்றனர். இதற்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டுவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் வாழை யூர் குணா, மாவட்ட செய லாளர் சிறுதூர் பாலா, மாநகர் மாவட்ட செயலா ளர் தாமோதரன் உடனிருந்தனர்.

    • குளச்சல் நகர அ.தி.மு.க. முடிவு
    • மகளிர் அணி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது எனவும் வலியுறுத்தப்பட்டது

    குளச்சல் :

    குளச்சல் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் நகர அலுவலகத்தில் நட ந்தது. கவுன்சிலர் ஆறுமு கராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செய லாளர் ரவீந்திரவர்ஷன், ஆனக்குழி சதீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் சிட்டி சாகுல்அமீது வரவேற்று பேசினார். துணை செய லாளர் செர்பா தீர்மான ங்கள் வாசித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் எஸ்.எம்.பிள்ளை, நகர முன்னாள் செயலாளர்கள் பஷீர்கோயா, கில்லேரியன் மற்றும் தர்மராஜ், ஜெகன், வினோத், அன்பில் அகமது, பூக்கடை றாபின், ஜில்லட், முகம்மது, சாகுல் அமீது, ஜோக்கின், லூயிஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் குளச்சல் நகரில் மாசுப்பட்டு கிடக்கும் ஏ.வி.எம். சானல், வெள்ளி யாகுளம் ஆகிய 2 நீர்நிலை களையும் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டி ற்கு கொண்டு வர வலியுறுத்துவது, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பொது ச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டும் வேட்பாளரின் வெற்றிக்கு தீவிர தேர்தல் பணி செய்வது, குளச்சல் நகராட்சியில் உள்ள 25 பூத்களிலும் மகளிர், இளை ஞர்கள் உள்ளிட்டோர்களை இணைத்து தேர்தல் பணிக்குழு அமைப்பது, கடந்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடந்த மாநாட்டில் குளச்சலில் இருந்து கலந்துகொண்ட தொண்டர்கள், மகளிர் அணி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது எனவும் வலியுறுத்தப்பட்டது. முடிவில் முன்னாள் துணை செயலாளர் தேவி சக்தி நன்றி கூறினார்.

    • கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது.
    • பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பொறியாளா்களால் மேற்கொள்ளப்பட்ட இப்பணி தற்போது முடிவடைந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்ற தோ்தலுக்கு தஞ்சாவூா் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்க ளுக்கான முதல்நிலை சரிபாா்ப்பு பணி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், கலெக்டருமான தீபக் ஜேக்கப் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் தொடங்கப்பட்டது.

    பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பொறியாளா்களால் மேற்கொள்ளப்பட்ட இப்பணி தற்போது முடிவடைந்துள்ளது.

    இதைத்தொடா்ந்து, முதல்நிலை சரிபாா்ப்பு பணியில் சரிபாா்க்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் 5 சதவீத மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கொண்டு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது.

    இதில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

    • தேர்தல் அறிக்கையில் கூறிய 80 சதவீத திட்டங்கள் தற்போது அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணியினர் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் தேவராஜ் மகாலில் நேற்று நடந்தது.

    கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், சாந்தமூர்த்தி, மகேந்திரன், நரசிம்மன், செல்வம், சுப்பிரமணி, கோவிந்தன், தனசேகரன், குமரேசன், ரஜினிசெல்வம், அறிஞர், குண.வசந்தரசு, பேரூர் கழக செயலாளர்கள் பாபு சிவக்குமார், தம்பிதுரை, பாபு, வெங்கட்டப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் வரவேற்றார்.

    கூட்டத்தில் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி பங்கேற்று, சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தேர்தல் அறிக்கையில் கூறிய 80 சதவீத திட்டங்கள் தற்போது அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மக்கள் அனைவருக்கும் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து எடுத்து கூற வேண்டும். தற்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    தகுதியுள்ள அனைவருக்கும் இந்த திட்டத்தின் பயன் சென்று சேரும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் உள்ள அனைவரும் இந்த ஆட்சியில் ஏதோ ஒரு வகையில் பயனடைந்து வருகிறார்கள். ஆகவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணியினர் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்பம்.

    அதை நிறைவேற்றிட வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் செங்குட்டுவன், சுகவனம், முன்னாள் எம்.பி. வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் டாக்டர்.மாலதி நாராயணசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கதிரவன், நகராட்சி தலைவர் பரிதா நவாப், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், தி.மு.க. பிரமுகர் தொழில் அதிபர் கே.வி.எஸ். சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.
    • தமிழகத்தில் பா.ஜ.க. படிப்படியாக வளர்ந்து வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தமிழ்நாட்டிற்கு வரவில்லை. ஒத்த கருத்துடைய கட்சிகளை பா.ஜ.க. கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சியாகவே பார்க்கலாம். தமிழகத்தில் பா.ஜ.க. படிப்படியாக வளர்ந்து வருகிறது. இங்கு திராவிட கட்சிகள் பல ஆண்டுகள் ஆண்ட நிலை–யில், அந்த போதையில் இருந்து தெளிந்த பிறகே மாற்றத்தை பற்றி பேச வேண்டும். சமீபத்தில் நடந்த ரெயில் விபத்து என்பது 21-ம் நூற்றாண்டில் நடந்திருப்பது கண்டிப்பாக ஒரு தலைகுனிவுதான். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரெயில் விபத்து நடந்த இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. ரெயில் விபத்து சதி என்று கூறப்படும் நிலையில் அப்படி இருந்தால் அது பயங்கரமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி. சம்பத் கலந்து கொண்டு பேசினார்.
    • வருகிற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வின் கடலூர் மாநகர திருப்பாதிரிப்புலியூர் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பாதிரிப்புலியூர் பகுதி செயலாளர் கெமிக்கல் மாதவன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சேவல்குமார், மாநில மீனவர் அணி இணை செயலாளர் தங்கமணி, ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஆர்.வி.ஆறுமுகம், முன்னாள் நகரமன்ற தலைவர் சி.கே. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி. சம்பத் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க.வின் மூத்த முன்னோடி களின் துணையோடு திருப்பாதிரிப்புலியூர் பகுதி சார்பில் 12,500 புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், பூத்கமிட்டி அமைத்தல், வருகிற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோ சிக்கப்பட்டது.  இதில் மாவட்ட துணை செயலாளர்கள் தெய்வ.பக்கிரி, மணி மேகலை தஷ்ணா,வர்த்தக பிரிவு செயலாளர் வரதராஜன், தலைமை கழக பேச்சாளர் புலிசை ஆர்.சந்திரஹாசன், பகுதி நிர்வாகிகள் வெங்கடேசன், நாகராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செய லாளா் ஏ.ஆர்.சி.நாகராஜன் நன்றி கூறினாா்.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 40 தொகுதிக்கும் தேமுதிக சார்பில் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டது. பிரேமலதா தொடங்கி வைத்தார். #DMDK
    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேமுதிக கட்சி கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேமுதிக சார்பில் 40 பாராளுமன்ற தொகுதிக்கும் விருப்ப மனு இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என்று கட்சி தலைமை அறிவித்தது.

    அதன்படி கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு வினியோகம் செய்து தொடங்கி வைத்தார்.

    இதில் துணை செயலாளர்கள் சுதிஷ், பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



    பொது தொகுதிக்கு ரூ. 20 ஆயிரம், தனி தொகுதிக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம் செலுத்தி ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனு வாங்கி சென்றனர். சுதீசும் விருப்ப மனுவை பிரேமலதாவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

    பின்னர் பிரேமலதா தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    ×